செய்திகள்

3 தொகுதி தேர்தலை புதிய தமிழகம் புறக்கணிக்கும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

Published On 2016-11-02 08:26 GMT   |   Update On 2016-11-02 08:26 GMT
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளின் தேர்தலை புதிய தமிழகம் கட்சி புறக்கணிப்பதாக டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.
கோவை:

கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி யாருக்கும் ஆதரவு அளிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளது. பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் விநியோகம் ஆகிய புகார்களின் பெயரிலேயே 2 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதற்கு பரிகாரம் ஏதும் தேடாமலேயே மீண்டும் அதே வேட்பாளர்கள் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

எனவே அங்கு தேர்தல் நியாயமாக நடைபெறாது என்பதால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

புதுச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி எனது 25 ஆண்டு கால நண்பர். எனவே அவருக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்கிறது. எங்கள் கட்சியின் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதி நிர்வாகிகள் நாராயணசாமிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார்கள். தேவைப்பட்டால் நானும் பிரசாரம் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News