லைஃப்ஸ்டைல்

அந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை

Published On 2018-02-07 08:38 GMT   |   Update On 2018-02-07 08:38 GMT
இன்னைக்கு இருக்க டெக்னாலஜிக்கு அழிக்கபட்ட புகைப்படங்களை தேடி எடுக்கறதே சிலருக்கு வேலை. சுலபமாக உங்க பர்சனல் லைப் நெட்டுக்கு போய்விடும் ஜாக்கிரதை.
நீங்க எந்த காதலாவது பண்ணுங்க. ஆனா கண்ணை மூடிகிட்டு நம்பாதிங்க. கொஞ்சமாவது மனசாட்சி உள்ளவனா, நல்லவனா பாருங்க. அது தெரியாம வெப் கேம்ல காட்டரது, போட்டோ எடுத்து அனுப்பரது எல்லாம் வேண்டாம். தூக்கி நெட்ல போட்டு போய்கிட்டே இருக்கானுங்க.

டேட்டிங், ஹனிமூன் போற புண்ணியவான்களே! உங்க பொண்டாட்டி / லவ்வர வித விதமான போஸ்ல போட்டோ எடுப்பதை நிறுத்துங்க. அப்படி இல்லைனா தனி மெம்மரி கார்ட் யூஸ் பண்ணுங்க. ஊர் சுற்றும் போட்டோ எல்லாம் எடுப்பது அதோ மெம்மரி கார்டில் அந்தரங்க போட்டோவும் எடுக்கறது, அதுக்கு அப்புறம் அந்தரங்க போட்டோ எல்லாம் கம்பியூட்டருக்கு மாத்திட்டு டெலிட் பண்ணிட்டு பிரிண்டிங் கொடுக்கறது. ஆனா இன்னைக்கு இருக்க டெக்னாலஜிக்கு அழிக்கபட்ட போட்டோஸ் தேடி எடுக்கறதே சிலருக்கு வேலை. சுலபமா உங்க பர்சனல் லைப் நெட்க்கு போய்டும்.

சில அதிமேதாவிங்க செல்போன்ல மெம்மரி கார்டுக்கு லாக் போட்டு இருக்கும் தைரியத்தில் யாரிடம் வேண்டுமானலும் செல்போனை கொடுத்துட்டு போறது. அப்புறம் எப்படி வெளியே போச்சினு அழறது. அதே மாதிரி லாப்டாப்ல இருக்க ப்ரவுசர்ல பாஸ்வேர்ட் எல்லாம் சேவ் பண்ணி வைக்கிறது. அதுக்கு அப்புறம் அந்த லாப்டாப் நண்பர்கள் கிட்ட கொடுக்கறது. அவங்க ப்ரவுஸர் ஓப்பன் பண்ணதும் அது தானா உங்க மெயில் உள்ள போய்டும். உங்க ராணுவ ரகசியமும் போகும். அதனால லாப்டாப்பில் எப்பவும் இரண்டு அக்கவுண்ட் வச்சி இருங்க. இல்லைனா guest அக்கவுண்ட் ஆன் பண்ணி வைங்க.

டெக்னிக்கல் சிங்கங்கள்கிட்ட Remote Access (அவங்க உங்க கம்பியூட்டர் ஸ்கீரின் பாக்கறது, உங்க கம்பியூட்டரை ஆப்ரேட் பண்றது) கொடுத்தா வேலை முடிஞ்சதும் அந்த சாப்ட்வேரை (Teamviewer, logmein) தூக்குங்க. அவசர உதவி ஏதாவது தேவைபட்டு உங்க இ-மெயில் பாஸ்வேர்ட் கொடுத்து இருந்தா அதையும் மாற்றுங்கள். யாரையும் நம்பாதிங்கன்னு சொல்ல வரவில்லை. உங்க நம்பிக்கை வேற எதிலாவது காட்டுங்க.
Tags:    

Similar News