லைஃப்ஸ்டைல்

விபத்தை தடுக்க சாலை விதிகளை கடைபிடிப்பது எப்படி?

Published On 2016-10-19 01:47 GMT   |   Update On 2016-10-19 01:48 GMT
விபத்தை தடுக்க சாலை விதிகளை கடைபிடிப்பது எப்படி? என்பது குறித்த சில முக்கியமான தகவல்களை கீழே பார்க்கலாம்.
இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது ஒருவர் அணிந்திருக்கும் ஆடைகள், பாத அணிகள் கூட விபத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

* போதிய அளவு ஓய்வு இல்லாத போது அடுத்தவரின் கட்டாயத்தின்பேரில் வாகனத்தை ஓட்டுவது.

* மருந்து, மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் வாகனத்தை ஓட்டுவது.

* மதுபான வகைகள் அருந்தி வாகனத்தை ஓட்டுவது.

* சிறுநீர், மலம் கழிக்க நினைத்தும் அதிக தூரம் வாகனத்தை ஓட்டுவது.

* வாகனத்தினுள் சாலையை மறைக்கும் வண்ணம் அலங்கார பொம்மைகளைப் பொருத்துவது.

* வாகன ஓட்டுநர் மற்றவர்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டு வருவது.

* ஓடும் வாகனத்தில் இருந்து எந்தவொரு பொருளையும் வெளியே தூக்கி எறிவது.

* பயணத்தை பற்றிய சிந்தனை அல்லாமல் மற்றவற்றை சிந்திப்பது.

* வாகனத்தின் சக்கரங்கள் இலகு மண்ணில் புதைவதாக இருந்தாலும் அனைத்து சக்கரங்களும் மண்ணில் இறங்காமல் பார்த்துக் கொள்வது.

இவைகளை மனதில் கொண்டால் விபத்துக்களை தவிர்க்கலாம்.

Similar News