லைஃப்ஸ்டைல்

முதலுதவி அளிப்பவர் கவனத்தில் கொள்ள வேண்டியவை

Published On 2016-09-13 05:00 GMT   |   Update On 2016-09-13 05:01 GMT
முதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
 முதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று :

1. உயிரை பாதுகாக்க வேண்டும்.
2. நிலமை மோசமாவதைத் தடுக்க வேண்டும்.
3. சீக்கிரத்தில் குணமளிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது தைரியம். பாதிக்கப்பட்டவர்களை தேற்றி, ஆறுதல் சொல்ல வேண்டும். பயப்படக் கூடாது. தவிரவும் வேறு சில பொறுப்புகளும் உள்ளன.

1. உடனடியாக நிலமையை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். பதட்டபடக் கூடாது. தகுந்த மருத்துவ உதவி கிடைக்க உதவ வேண்டும்.

2. தீ விபத்தில் சிக்கி கொண்ட ஒருவருக்கு முதலுதவி அளிக்க வேண்டும் என்றால் முதலில் முதலுதவி அளிக்க முன்வருபவருக்குத் தன்னை பாதுகாக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிறகு பாதிக்கப்பட்டவர், பிறகு அருகில் இருப்பவர்.

3. பாதிப்பின் தன்மையை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

4. உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர் மீது நம் கவனம் முதலில் திரும்ப வேண்டும்.

5. சம்பந்தப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கோ, வீட்டுக்கோ, மருத்துவரிடமோ அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். தக்க வாகனங்களைத் தயார் செய்ய வேண்டும்-.

6. மருத்துவ உதவி கிடைக்கும்வரை சம்பந்தப்பட்டவருக்கு அருகேயே இருக்க வேண்டும்.

7. நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும்.

Similar News