லைஃப்ஸ்டைல்
முகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்

முகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்

Published On 2019-09-10 04:47 GMT   |   Update On 2019-09-10 04:47 GMT
நம் வீட்டிலேயே இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் தயார் செய்து பயன்படுத்தும் போது, முகம் வெள்ளையாக மாற பயன்படுவதுடன், சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது.
நம் வீட்டிலேயே இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் தயார் செய்து பயன்படுத்தும் போது, முகம் வெள்ளையாக மாற பயன்படுவதுடன், சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது. இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.

முகம் சிவப்பாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் தயாரிக்கும் முறை (Homemade Face Wash Powder In Tamil):

தேவையான பொருட்கள் :


பால் பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்,
ஓட்ஸ் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்,
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
கஸ்துரி மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கிரீன் டீ ஃபைன் பவுடர் - 3 டீஸ்பூன்

செய்முறை :

மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒரு பெரிய பவுலில் கலந்து கொள்ளவும். நன்றாக கலந்த பின், கண்ணாடி ஜாரில் இந்த கலவையை சேமித்து வைத்துக் கொள்ளவும். பின்பு தேவைப்படும் பொழுது அவற்றை எடுத்து ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்தில் தேய்த்து, 1 நிமிடம் மசாஜ் செய்து கழுவலாம்.

இதையே ஃபேஸ் பேக்காகவும் போட்டு கொள்ளலாம். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் 4 முறை பயன்படுத்தினாலே ரிசல்ட் தெரியும்.

இந்த ஹெர்பல் ஃபேஸ்பேக்(Herbal Face Pack) போட்டால் சருமம் பிரகாஷமாக மாறும், சருமம் முழுவதும் சீரான நிறம் கிடைக்கும், சருமம் பொலிவுடன் காணப்படும், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் நீங்கும்.

Tags:    

Similar News