லைஃப்ஸ்டைல்

பெண்கள் தங்க நகைகளை பாதுகாக்கும் முறைகள்

Published On 2018-04-18 05:38 GMT   |   Update On 2018-04-18 05:38 GMT
தங்க நகைகளை அதன் மதிப்புக்கு ஏற்ப தனி வகையான பாதுகாப்புக்கு உட்படுத்துவது, ஒவ்வொரு நகையும் அதற்குரிய நகை பெட்டியில் வைத்து பாதுகாப்பதே சிறந்தது.
தங்க நகைகளை எப்போதும் பீரோவில் வைத்து தான் பூட்டுகிறோம். பிறகு அதை விட பெரிய பாதுகாப்பு செய்யணுமா? என்ற கேள்வி எழும். பாதுகாப்பு என்பது தங்க நகைகளை அதன் மதிப்புக்கு ஏற்ப தனி வகையான பாதுகாப்புக்கு உட்படுத்துவது, ஒவ்வொரு நகையும் அதற்குரிய நகை பெட்டியில் வைத்து பாதுகாப்பதே சிறந்தது.

தங்க நகைகளை ஒட்டுமொத்தமாய் ஒரே பெட்டியில் குவியலாக வைத்து பாதுகாப்பது கூடாது. ஒரு நகையுடன் இன்னொரு நகை உராயாமல் தனித்தனியே வைத்திட வேண்டும். அதற்குரிய பெட்டியில் வெள்ளை பருத்தி துணி மூடி பாதுகாப்பது அவசியம்.

கல் வைத்த நகைகள் மற்றும் எனாமல் பூசிய நகைகள் என்றாலும் மெல்லிய துணி மூடி பாதுகாப்பது அதன் பொலிவு குறையாமல் பாதுகாக்க வழியாக இருக்கும். நகைகளை அணிந்து சென்று வந்த பிறகு மறுபடியும் பெட்டியில் வைக்கும் முன் நன்றாக வெள்ளை துணியால் துடைத்து வைக்கவும், காதணிகளின் திருகாணி, தண்டு பகுதிகள் எண்ணெய் பிசுக்குடன் இருக்கும். உடனே துடைத்து விட்டால் அழுக்கு சேராது. நகைகளுக்கென பிரத்யேக பாதுகாப்பு வழிமுறை குறிப்பிடப்பட்டபடி செயல்பட வேண்டும்.

Tags:    

Similar News