லைஃப்ஸ்டைல்

40 வயதிற்கு மேல் கூந்தலை பராமரியுங்கள்

Published On 2018-03-19 08:40 GMT   |   Update On 2018-03-19 08:40 GMT
40 வயதிற்கு பின் ஹார்மோன் மாற்றம் உண்டாவதால் சருமம், கூந்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே இந்த சமயத்தில் கூந்தல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
40 வயதிற்கு பின் ஹார்மோன் மாற்றம் உண்டாவதால் சருமம், கூந்தல் என எல்லாமுமே மாறுபடும். கூந்தல் வளர்ச்சி இன்னும் அதிகமாக பாதிக்கப்படும். இளமையாக இருந்த போது இருந்த கூந்தலின் பளபளப்பு, போஷாக்கு இப்போது கிடைக்காது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்களை பார்க்கலாம்.

பழைய சிறிய பிளாஸ்டிக் சீப்பு உபயோகித்தால் அதனை இனி தொடாதீர்கள். நல்ல தரமான பெரிய பற்கள் கொண்ட சீப்பினால் சீவும்போது ரத்த ஓட்டம் தூண்டப்படுகின்றன. இதனைக் கொண்டு சீவும்போது கூந்தலும் பளபளப்பாகும்.

அடிக்கடி தலைக்கு குளிப்பதால் இயற்கை எண்ணெய் சுரப்பது தடைபடும். இதனால் அதிக முடி உதிர்தல் பொடுகு ஆகியவை உண்டாகும். ஆகவே தலைக்கு குளிப்பதற்கு பதிலாக ட்ரை ஷாம்பு இப்போது கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி ஸ்ப்ரே செய்தால் கூந்தல் தலைக்கு குளித்தது போலவே அடர்த்தியாக காணப்படும். ஸ்கால்ப்பில் பாதிக்காது.

ஷவரில் அதிக நேரம் நின்று தலைக்கு குளிக்கும்போது கூந்தல் அதிகம் உடைய வாய்ப்புகள் உண்டு. அதோடு முடிக் கற்றைகளும் பலமிழக்கும். ஆகவே அதிக நேரம் ஷவரில் குளிப்பதை தவிருங்கள். கூந்தல் பலம் பெற ஆர்கானிக் கெரட்டின் கண்டிஷனர் பயன்படுத்தலாம்.

புரதம் - மீன், நட்ஸ், பீன்ஸ் ஜிங்க் - இறைச்சி, பீன்ஸ், இரும்பு - கீரை, பேரிச்சம்பழம், உலர் பழங்கள். மீன், பயோடின் - முட்டை, ராஸ் பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, செலினியம் - முட்டை மஞ்சள் கரு, பிரேசில் நட்ஸ், இந்த சத்துக்கள் எல்லாம் கூந்தலின் வளர்ச்சிக்கு தேவையானவை. 40 களில் இவற்றிற்கு முக்கியதுவம் கொடுங்கள்.


Tags:    

Similar News