லைஃப்ஸ்டைல்

முடி உதிர்வை கட்டுப்படுத்தும் வெந்தயம்

Published On 2016-12-01 04:21 GMT   |   Update On 2016-12-01 04:21 GMT
அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வு தருவது வெந்தயம். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.
வெந்தயத்தில் அடங்கியுள்ள புரோட்டீன்கள், வைட்டமின் சி, இரும்புச்சத்து, நிக்கோடினிக் அமிலம் மற்றும் லெசித்தின் போன்ற உட்பொருட்கள் உங்கள் முடியின் வேர்கண்களை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்கும். இது முடி வளர்ச்சியினை அதிகரித்து வலுவற்ற வேர்கண்களை வலுவாகக் கட்டமைக்க உதவுகிறது.

வெந்தயத்தை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறை சேர்த்து ஸ்கால்ப்பில் தடவுங்கள். இதை செய்ய கைப்பிடியளவு வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவிட்டு காலையில் எடுத்து அரைத்து ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறை விட்டு நன்கு கலக்கிக்கொள்ள வேண்டும். இதை உங்கள் ஸ்கால்ப்பில் தடவவும். வாரம் ஒருமுறை இதை செய்து வந்தால் கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தலாம்.

தயிரையும் வெந்தய இலைகளையும் கொண்டு உங்கள் முடி உதிர்வை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். கொஞ்சம் வெந்தயக் கீரையை எடுத்து அதை வேகவைத்து சாற்றைப் பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள். அதே அளவு தயிரை அதனுடன் கலந்து நன்கு கலக்கி அதை ஸ்கால்ப்பில் தடவ வேண்டும்.

தலைமுடி நரைக்கு ஒரு சிறந்த தீர்வாக வெந்தயம் மற்றும் நெல்லிக்காய் தூளும் எலுமிச்சையும் உதவும். இவற்றை நன்கு கலக்கி அந்த கூழை ஸ்கால்ப்பில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்த பின் கூந்தலை அலசவும்.

வெந்தயம் ஒரு இயற்கையான கண்டிஷனராக செயல்படக்கூடியது. பாலும் வெந்தயத் தூளும் சேர்ந்தால் ஒரு நல்ல கண்டிஷனர் கிடைக்கும். இதை கலந்து ஸ்கால்ப்பில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

உங்கள் முடி ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த மிகவும் சுலபமான வழி இது. வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் அதை கூழாக அரைத்துக்கொள்ளவும். அதை தலையில் தேய்த்து ஒரு 45 நிமிடம் கழித்து அலசிவிடவும். இது சூழல் மாசுபாட்டால் ஏற்படும் முடி சேதாரத்தை சரிசெய்யும்.

Similar News