லைஃப்ஸ்டைல்

சருமத்திற்கு அழகு சேர்க்கும் மூலிகை மருத்துவ டிப்ஸ்

Published On 2016-11-25 05:34 GMT   |   Update On 2016-11-25 05:34 GMT
உடல் மினுமினுப்பாக வேண்டுமானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மூலிகை மருத்துவ குறிப்புகளை பின்பற்றி வாருங்கள்.
நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்தினை ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக மசித்து பின் அதை முகத்தில் மற்றும் கை கால்களில் தடவி 30 நிமிடம் உலர விட்டு முகத்தை கழுவினால் போதும் முகம் டாலடிக்கும்.

உடல் மினுமினுப்பாக வேண்டுமானால் வெறும் வெளிப்பூச்சு மட்டும் போதாது. உள்ளுக்குள் கொடுக்கும் உணவும் மிக முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். இந்த உணவுகள் உடலுக்கு சென்று நமக்கு தேவையான மெலனினை தவிர மற்றவற்றை நீக்கி உடலை மிளிரச் செய்துவிடும் என்பதில் சிறு அச்சமும் கிடையாது.

இரவில் உறங்கச்செல்லுமுன் தேன், குங்குமப்பூ, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம். இவ்வாறு சாப்பிட்டு வர உடல் அழகைப்பெற்று மிளிரும்.

முகத்தினை வசீகரமாக்க நமக்கு தேவையானது சந்தனக்கட்டைதான். சந்தனக்கட்டையை நன்றாக எலுமிச்சை சாறு விட்டு தேய்த்து எடுத்து முகத்தில் பூசி உலர வைத்து கழுவுங்கள். உங்கள் முகத்தை பார்க்க உங்களுக்கே ஆசையாக இருக்கும்.

பலருக்கு கருப்புதான் பிரச்சினை. வெள்ளரிக்காய், கஸ்தூரி மஞ்சள், வேப்பம்பூ இவற்றை வாங்கி வைத்துக்கொண்டு மிக்ஸியில் போட்டு மைய அரைத்து பொறுமையாக தினமும் உடலில் தேய்த்து தடவி உலர வைத்த பின் குளித்து விடுங்கள். இதே போன்று ஒரு மாத காலம் தொடர்ந்து செய்து வாருங்கள். உங்கள் நிறத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

கீரீம்களை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள். இது போலி தோற்றத்தை மட்டுமே உண்டாக்கும். கற்றாழையை முகத்தில் தடவிவிட்டு காயவிட்டு குளித்து வாருங்கள் முகம் பிரகாசமடையும்.

Similar News