லைஃப்ஸ்டைல்

சருமத்தின் அழகை பாதுகாப்பது எப்படி?

Published On 2016-09-14 01:44 GMT   |   Update On 2016-09-14 01:44 GMT
ஒவ்வொருவரின் சருமத்திற்கும் ஏற்றவாறு சில அழகுக் குறிப்புகள் பலனளிக்கும். அவை என்னவென்று பார்க்கலாம்.
நீங்கள் செய்த சில அழகு குறிப்புகள் உங்களுக்கு பலனளிக்காமல் போகலாம். இதற்காக அந்த குறிப்பு தவறானது என நினைக்கக் கூடாது. அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதல்ல என்பதுதான் உண்மை. ஒவ்வொருவரின் சருமத்திற்கும் ஏற்றவாறு சில அழகுக் குறிப்புகள் பலனளிக்கும்.

உங்கள் சருமம் வறண்ட சருமமாக இருந்தால் எந்த வித ஃபேஸியல் மாஸ்க்கையும் 10 - 15 நிமிடங்களுக்கு மேல் உபயோகிக்க கூடாது.

இது மேலும் வறட்சியை அளித்து விடும். பலனும் தராது. அதேபோல் எலுமிச்சை, பப்பாளி ஆகியவற்றை நேரடியாகவோ அடிக்கடியோ உபயோகிக்கக் கூடாது. அதிகமாக முகம் கழுவக் கூடாது.

எண்ணெய் சருமமாக இருந்தால் 20 நிமிடங்களுக்கும் ஃபேஸியல் மாஸ்க்கை உபயோகிக்கலாம்.

கூடுதல் பலனளிக்கும். எலுமிச்சை, பப்பாளி ஆகியவற்றை அடிக்கடி உபயோகிக்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவுதல் அவசியம். இப்படி சருமத்திற்கு ஏற்றவாறுதான் அழகுக் குறிப்பை பயனபடுத்த வேண்டும்.

கரும்புள்ளி, மாசு, பரு, மரு ஆகியவை அழகை குறைப்பது மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் குறைக்கும் செயல்கள்தான். இவைகளில் ஆரோக்கியமற்ற சருமத்தின் வெளிப்பாடுகள்.

Similar News