லைஃப்ஸ்டைல்

தலை முதல் பாதம் வரை அழகு பராமரிப்பு

Published On 2016-04-04 05:37 GMT   |   Update On 2016-04-04 05:37 GMT
தலை முதல் கால் வரை அழகாகத் தோன்ற கீழே உள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவும்.
கூந்தல்: எண்ணெய் மசாஜ் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்க உதவும். வாரம் ஒரு முறை எண்ணெயை லேசாக சூடாக்கி கூந்தலின் வேர்களில் ஆரம்பித்து நுனிவரை தடவவும். விரல் நுனியால் வேர்களை நன்றாக தேய்த்து விடவும். மாதம் ஒரு முறை மேலே உள்ளது போல் எண்ணெயை தடவவும். பிறகு வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, அதை நன்றாக பிழிந்து விடவும். சூடான துணியை தலையில் கட்டவும். 15 நிமிடம் கழித்து கூந்தலை சீயக்காய் அல்லது ஷாம்பூவால் கழுவவும். வேர்களுக்குள் எண்ணெய் ஊடுறுவ இது உதவும்.

முகம்: வாழைப்பழத்தை நன்றாக மசித்து முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து கழுவி விடவும். இது முகத்திற்கு பட்டுப்போன்ற மென்மையும், பளபளப்பும் தரும். அழுக்கும், எண்ணெய் பசையும் ஒன்று சேர்ந்தால் விளைவு, பருக்கள்தான்! இதை தடுக்க ஒரே வழி முகத்தை அடிக்கடி கழுவவும்.

கண்கள்: கண்களைச் சுற்றி கருவளையங்கள் இருந்தால், சோர்ந்த தோற்றத்தை உங்களுக்கு தரும். இதை தவிர்க்க சரியான தூக்கம் தேவை. கருவளையங்களை போக்க உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரித் துண்டை கண்கள் மீது 15 முத‌ல் 20 நிமிடம் வைத்திருப்பது நல்லது.

உதடுகள்: மென்மையான உதடுகளின் ரகசியம் ஈரப்பதம். நெய், வாசலீன் ஆகியவற்றை தடவுவதால் உதடுகளில் வெடிப்பு வருவதை தவிர்க்கலாம். உதடுகள் இளஞ்சிவப்பு நிறத்தைப் பெற தூங்குவதற்கு முன் பீட்ரூட் சாறு தடவவும்.

சருமம்: உடலின் சருமத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு உயிரிழந்த சருமத்தை அகற்றுவது மிகவும் அவசியம். 2 தேக்கரண்டி சர்க்கரையை, 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் அல்லது மோருடன் சேர்க்கவும். இந்த கலவையால் உடலை தேய்த்து கழுவவும். இது சருமத்திற்கு புது பொலிவு தரும்.

கைகள்: கைகளை மிருதுவாக வைக்க கை கழுவியவுடன் க்ரீம் தடவவும். வீட்டு வேலை அல்லது தோட்ட வேலை செய்யும் போது மறக்காமல் கையுறை அணியவும்.

கால்கள்: கால்களில் வெடிப்பு வருவதை தவிர்க்க, கால்களை தேய்த்து கழுவ வேண்டும். இது சொரசொரப்பான தோலை நீக்கும். அதன் பிறகு காலில் க்ரீம் தடவினால் மென்மையான கால்களைப் பெறலாம். 

Similar News