லைஃப்ஸ்டைல்

காலிஃபிளவர் பிரை செய்வது எப்படி

Published On 2018-02-02 09:37 GMT   |   Update On 2018-02-02 09:37 GMT
சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள காலிஃபிளவர் பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த பிரையை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

காலிஃபிளவர் - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்
சீரகம் - அரை டீஸ்பூன்,
சோம்பு - அரை டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - கால் டீஸ்புன்
சில்லி சிக்கன் மசாலா பொடி - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

காலிஃபிளவரை கழுவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

காடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து சீரகம், சோம்பு போட்டு தாளித்த பின்னர் காலிஃபிளவரை போட்டு வதக்கவும்.

காலிஃபிளவர் லேசாக வதங்கியதும் [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு, மூடி போட்டு வேகவிடவும்.

காலிஃபிளவர் முக்கால்பாகம் வெந்ததும் சில்லி சிக்கன் மசாலா பொ, கறிவேப்பிலையச் சேர்த்து கிளறவும்.

காலிஃபிளவர் நன்றாக வெந்து மசாலா வாடை அடங்கியதும் இறக்கி பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News