லைஃப்ஸ்டைல்

தோசைக்கு அருமையான மட்டன் தலைக்கறி கிரேவி

Published On 2018-01-31 09:31 GMT   |   Update On 2018-01-31 09:31 GMT
தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மட்டன் தலைக்கறி கிரேவி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஆட்டு தலை - 1
தக்காளி - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
[பாட்டி மசாலா] சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் -  1/4 ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
எண்ணெய் - 4 ஸ்பூன்
ஏலக்காய் - 2
[பாட்டி மசாலா] தனியா தூள் - 1/2 ஸ்பூன்
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
தேங்காய் துருவல் -  1 கப்



செய்முறை :

தலைக்கறியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

பின்பு தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் [பாட்டி மசாலா] சீரகத்தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

2 நிமிடம் வதக்கியவுடன் அதனுடன் தலைகறியை சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 5 விசில் விடவும். 

விசில் போனவுடன் குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்

குழம்பு பதம் வந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News