லைஃப்ஸ்டைல்

சூப்பரான ஸ்நாக்ஸ் இறால் பஜ்ஜி

Published On 2017-11-17 10:10 GMT   |   Update On 2017-11-17 10:10 GMT
வாழைக்காய் பஜ்ஜி தொடங்கி வெங்காய பஜ்ஜி, முட்டை பஜ்ஜி வரை சுவைத்திருப்பீர்கள். இன்று இறால் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

இறால் - 1/2 கிலோ
மைதா - 2 கையளவு
அரிசி மாவு - 1 கையளவு
சோள மாவு - 1 கையளவு
உப்பு - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.



செய்முறை :

இறாலை சுத்தம் செய்து கொள்ளவும்.

பச்சை மிளகாயை அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறால் மைதா, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, அரைத்த ப.மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலக்கவும்.

மாவை நன்கு திக்காக கரைத்து இறாலை 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறிய இறாலை இப்போது மாவில் நன்கு புரட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

சூப்பரான இறால் பஜ்ஜி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News