லைஃப்ஸ்டைல்

சூப்பரான ஸ்நாக்ஸ் காலிப்ளவர் போண்டா

Published On 2017-11-13 09:50 GMT   |   Update On 2017-11-13 09:50 GMT
இந்த மழைக்கு மாலையில் காபியுடன் சூடாக காலிப்ளவர் போண்டா சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று இந்த போண்டா செய்வது எப்படி என்று பார்க்ககலாம்.
தேவையான பொருட்கள் :

கடலை மாவு - முக்கால் கப்
அரிசி மாவு - அரை கப்
வெள்ளை ரவை - 1 டேபுள்ஸ்பூன்
காலிப்ளவர் - 1 பெரியது
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிது துண்டு
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - 1/2 கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
தனியாத்தூள்   - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - ருசிக்கேற்ப
கடலை எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :

இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

காலிப்ளவரை ஒவ்வொரு பூவாக எடுக்கவும்.

சூடு நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், உப்பு போட்டு அந்த நீரில் உதிர்த்த காலிப்ளவரை 10 நிமிடங்கள் போட்டு எடுத்து தனியா வைக்கவும்.

ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, ரவை, மிளகாய் தூள், இஞ்சி துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, ஓமம், உப்பு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் சூடாக காய்ச்சிய கடலை எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து, பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சுத்தம் செய்து வைத்த காலிப்ளவர் துண்டுகளை மாவில் நன்றாக தோய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

தீயை மிதமான (மீடியம்) தீயில் வைத்து வறுத்து எடுக்கவும். போண்டாவிற்கு காலிப்ளவர் துண்டுகளை பெரிதாக நறுக்கி பயன்படுத்தவேண்டும்.

எண்ணெய் சலசலப்பு அடங்கியதும் போண்டாவை எண்ணெயில்லாமல் வடிகட்டி எடுத்து பரிமாறவும்.

சுட சுட காலிப்ளவர் போண்டா தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News