லைஃப்ஸ்டைல்

சாதத்திற்கு அருமையான கோவக்காய் அவியல்

Published On 2017-11-10 07:33 GMT   |   Update On 2017-11-10 07:33 GMT
சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த கோவக்காய் அவியல். இன்று இந்த அவியல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோவக்காய் - 10 முதல் 15 வரை
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன் வரை
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
தயிர் - 1/2 கப்
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்றவாறு



செய்முறை :

கோவக்காயை நன்றாக கழுவி விட்டு, நீளவாக்கில் 4 அல்லது 5 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தயிரை நன்றாக கடைந்து வைக்கவும்.

வெட்டிய கோவக்காயில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, நன்றாக பிசறி வைக்கவும்.

தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, 2 டேபிள்ஸ்பூன் தயிரையும் சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கோவக்காய் துண்டுகளைப் போட்டு, 5 நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் அதில் சிறிதளவு நீரை தெளித்துக் கிளறி விட்டு, மூடி வைத்து, மிதமான தீயில் வேக விடவும்.  

காய் முக்கால் பங்கு வெந்தால் போதும், மூடியைத் திறந்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போடவும். (இப்பொழுது கிளற வேண்டாம்). அப்படியே மூடி வைத்து மேலும் 2 நிமிடங்கள் வேக விடவும்.

பின்னர் மூடியைத் திறந்து, கிளறி விட்டு, அதில் மீதமுள்ள தேங்காய் எண்ணெயை ஊற்றி, கறிவேப்பிலையயும் சேர்த்துக் கிளறவும்.

கடைசியில், கடைந்த தயிரை ஊற்றிக் கிளறி, உடனே இறக்கி வைக்கவும்.

சூப்பரான கோவக்காய் அவியல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News