லைஃப்ஸ்டைல்

உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பங்கூழ்

Published On 2018-03-23 04:31 GMT   |   Update On 2018-03-23 04:31 GMT
வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு, கேழ்வரகு தானியங்களை அதிகளவு சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பங்கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சுத்தம் செய்த கம்பு - 100 கிராம்,
சாதம் - கால் கப்,
தயிர் - அரை லிட்டர்,
தோலுரித்த சின்ன வெங்காயம் - 20,
பச்சை மிளகாய் - 4,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
மாங்காய் துண்டுகள் - தேவையான அளவு.



செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கம்பை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் களைந்து கம்பை மிக்சியில் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும்.

குக்கரில் அரைத்த கம்புடன் சாதம், அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி 5 விசில் விட்டு இறக்கவும்.

நன்கு ஆறிய கம்பு சாதத்துடன் உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், தயிர், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்கவும்.

மாங்காய்த் துண்டுகளை தொட்டுக் கொண்டு இந்த கூழை குடிக்கலாம். மண் சட்டியில் ஊற்றி வைத்து பருகினால் சுவை கூடும்.

பலன்கள்: உடலை குளிர்ச்சியாக்கும். உடலுக்கு தேவையான சக்தியை தரவல்லது.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News