லைஃப்ஸ்டைல்

காலைச் சிற்றுண்டி - சாபுதானா வெஜிடபிள் கிச்சடி

Published On 2018-03-16 04:57 GMT   |   Update On 2018-03-16 04:57 GMT
சாபுதானா வெஜிடபிள் கிச்சடி காலைச் சிற்றுண்டியாக சாப்பிட ஏற்றது. உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தரவல்லது. இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி - ஒரு கப்,
உருளைக்கிழங்கு - ஒன்று ( தோல் நீக்கி, சதுர துண்டுகளாக்கவும்),
பச்சை பட்டாணி - கைப்பிடியளவு,
ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - கைப்பிடியளவு,
கேரட்  - 1,
உப்பு - தேவையான அளவு,
பச்சை மிளகாய் - 3 (இரண்டாக கீறவும்),
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை - 5 டீஸ்பூன்,
மாதுளை முத்துக்கள் - சிறிதளவு,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
நெய்யில் வறுத்த முந்திரி - 10.

தாளிக்க:

நெய் - 3 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்,
மிளகு - கால் டீஸ்பூன்.



செய்முறை :

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

பச்சை பட்டாணி, ஸ்வீட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.

கேரட், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஜவ்வரிசியை 5 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் அதனுடன் பச்சை மிளகாய், ஜவ்வரிசி சேர்த்து வதக்கவும்.

பிறகு அதனுடன் உப்பு, காய்கறிகள் சேர்த்து கிளறி மூடி சிறு தீயில் வைத்து ஐந்து நிமிடம் வேக விடவும்.

பிறகு மூடியை திறந்து எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

மேலே வறுத்த வேர்க்கடலை, மாதுளை முத்துக்கள், கொத்தமல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

சூப்பரான சாபுதானா வெஜிடபிள் கிச்சடி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News