லைஃப்ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த புல்கா

Published On 2018-01-27 04:25 GMT   |   Update On 2018-01-27 04:25 GMT
சர்க்கரை நோயாளிகள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் புல்கா சுட்டு சாப்பிடலாம். இன்று இந்த புல்கா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்



செய்முறை :

கோதுமை மாவுடன் உப்பு, நீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவினை ஒரு மணிநேரம் ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.

1 மணி நேரம் கழித்து மாவினை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். சப்பாத்தி மாவை மெல்லியதாக தேய்க்க வேண்டும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் விடாமல் சப்பாத்தியைப் போட்டு, லேசாக காய்ந்ததும் ஒரு இடுக்கி கொண்டு எடுத்து தணலில் நேரடியாகக் காட்டி வேக விடவும்.

சப்பாத்தி வெந்து பூரி போல் உப்பி வரும். இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

சப்பாத்தி கருகாத அளவு பார்த்துக் கொள்ள வேண்டும். 

சூப்பரான புல்கா சப்பாத்தி ரெடி!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News