லைஃப்ஸ்டைல்

குதிரைவாலி - பாசிப்பருப்பு உப்புமா கொழுக்கட்டை

Published On 2018-01-18 04:50 GMT   |   Update On 2018-01-18 04:50 GMT
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - சிறிதளவு
தேங்காய் துருவல் - கால் கப்
ப.மிளகாய் - 3
கடுகு - கால் டீஸ்பூன், 
உளுந்தம் பருப்பு - கால் டீஸ்பூன், 
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
சீரகம் - சிறிதளவு
கடலெண்ணெய் - தேவைக்கு
உப்பு - சுவைக்கு



செய்முறை :

குதிரைவாலி அரிசியை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாசிப்பருப்பு, சீரகத்தை மிக்சியில் போட்டு ரவை போல் பொடித்து தனியாக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்த பின்னர் ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். உப்பு சேர்க்கவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் குதிரைவாலி அரிசி, பொடித்த பாசிப்பருப்பு, சீரகத்தை சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

முக்கால் பதம் வெந்தவுடன் இறக்கி விட்டு இளஞ்சூட்டில் இருக்கும் போதே தேங்காய் துருவல் சேர்த்து கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும்.

பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 முதல் 12 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

அருமையான குதிரைவாலி - பாசிப்பருப்பு உப்புமா கொழுக்கட்டை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News