லைஃப்ஸ்டைல்

கேழ்வரகு உருளைக்கிழங்கு சப்பாத்தி

Published On 2018-01-06 06:38 GMT   |   Update On 2018-01-06 06:38 GMT
கேழ்வரகுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சப்பாத்தி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த சப்பாத்தி செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை : 

கேழ்வரகு - 1 கப்
கோதுமை மாவு - அரை கப்
உருளைக்கிழங்கு - 2, 
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
[பாட்டி மசாலா] கரம் மசாலா தூள் - சிறிதளவு, 
உப்பு - சிறிதளவு,
கொத்தமல்லி - சிறிதளவு
தயிர் - 3 டீஸ்பூன், 
எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை

உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வேகவைத்த உருளைக்கிழங்கு, உப்பு, சிறிது எண்ணெய், கொத்தமல்லி, [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

பிசைத்த மாவை அரைமணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

சுவையான கேழ்வரகு உருளைக்கிழங்கு சப்பாத்தி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News