லைஃப்ஸ்டைல்

எலுமிச்சை இலை துவையல் செய்வது எப்படி

Published On 2017-12-26 03:11 GMT   |   Update On 2017-12-26 03:11 GMT
வாய் கசப்பு, வாந்தி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த துவையலை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். இன்று இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 

நார்த்த இலை - 1 கப் 
எலுமிச்சை இலை - 1 கப் 
கறிவேப்பிலை - 1/2 கப் 
மிளகாய் வற்றல் - 10 
ஓமம் - 1 டேபிள்ஸ்பூன் 
பெருங்காயம் - சிறிது 
உப்பு - தேவையானது 



செய்முறை : 

எலுமிச்ச இலையையும் நார்த்த இலையையும் நன்றாகக் கழுவி துடைத்து நிழலில் உலர்த்தி எடுக்கவேண்டும்.(இலைகளை microwave oven ல் ஒரு microwave plate ல் பரப்பி 10 sec. வைத்தாலும் போதும்) 

அடுத்து வெறும் கடாயில் இலைகளை எண்ணெய் விடாமல் வறுக்கவேண்டும்.

மிளகாய் வற்றல், ஓமம், பெருங்காயம் மூன்றையும் எண்ணெய் விட்டு வறுக்கவேண்டும். 

இலைகள் தவிர மற்றவற்றை உப்புடன் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கடைசியில் இலைகளையும் சேர்த்து அரைக்கவேண்டும். 

தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News