லைஃப்ஸ்டைல்

கொழுப்பை குறைக்கும் கொள்ளு - பூண்டு சட்னி

Published On 2017-12-02 04:52 GMT   |   Update On 2017-12-02 04:52 GMT
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
 
கொள்ளு  - 1  கப்
வெங்காயம்  - 2
தக்காளி - 1
பூண்டு - 10 பல்லு
சீரகம் - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
புளி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய், உப்பு - தேவையான அளவு



செய்முறை :

கொள்ளுவை நன்றாக சுத்தம் செய்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
கொள்ளு, நறுக்கிய தக்காளி  இரண்டையும் சேர்த்து வேக வைத்து கொள்ளவும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய  வெங்காயம், சீரகம், தனியா, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
 
வெங்காயம் வதங்கியவுடன் வேகவைத்த கொள்ளு, தக்காளியுடன் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும். 

அனைத்தும் ஆறியவுடன் இதனுடன் ஊற வைத்த புளி, உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து எடுத்து பரிமாறவும்.
 
குறிப்பு: சட்னி அரைக்கும் போது கொள்ளு வேக வைத்த நீரை பயன்படுத்தவும். அரைக்கும் போது 5 நறுக்கிய சின்ன  வெங்காயத்தை பச்சையாக சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்கும். சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News