லைஃப்ஸ்டைல்

உடலுக்கு வலுசேர்க்கும் ஓட்ஸ் - பூண்டு சூப்

Published On 2017-11-28 03:33 GMT   |   Update On 2017-11-28 03:34 GMT
இந்த ஓட்ஸ் - பூண்டு சூப் குளிர்காலத்தில் தொண்டைக்கு இதமாக இருக்கும். உடலுக்கும் வலுசேர்க்கும். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - கால் கப்
பால் - ஒரு கப்
பூண்டு - 5 பல்
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தண்ணீர் - 2 கப்
வெண்ணெய் - சிறிதளவு



செய்முறை :

பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாலை நன்றாக கொதிக்க வைத்து கொள்ளவும்.

வாணலியில் வெண்ணெய்யை கொட்டி அது உருகியதும் பூண்டுவை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் ஓட்ஸை கொட்டி இரண்டு நிமிடம் கிளற வேண்டும்.

பிறகு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.

ஓட்ஸ் நன்கு வெந்ததும், பால், உப்பு சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு, இறக்க வேண்டும்.

கடைசியாக அதனுடன் [பாட்டி மசாலா] மிளகுத்தூள் சேர்த்து பரிமாறலாம்.

சூப்பரான ஓட்ஸ் - பூண்டு சூப் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News