லைஃப்ஸ்டைல்

வாயு தொல்லைக்கு சிறந்த பிரண்டை குழம்பு

Published On 2017-11-17 05:22 GMT   |   Update On 2017-11-17 05:22 GMT
வாயு தொல்லை, வயிற்று கோளாறு உள்ளவர்களுக்கு பிரண்டை சிறந்த நிவாரணம் அளிக்கும். இன்று பிரண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பிரண்டை - 1 கப்,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 7,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
புளி - ஒரு எலுமிச்சை அளவு,
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்,
பாட்டி மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
கடுகு - சிறிது,
வெல்லம் - சிறிது,
முழு தனியா - 1 டீஸ்பூன்,
சின்னவெங்காயம் - 15,
துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

பிஞ்சு பிரண்டையின் இலைகளை நீக்கி, சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

புளியை கெட்டியாகக் கரைத்து கொள்ளவும்.

கடாயில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய்த்துருவல், 5 சின்ன வெங்காயம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின்னர், சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் வதக்கிய பாட்டி மஞ்சள் தூள், பிரண்டைத் துண்டுகளை சேர்த்து பச்சை நிறம் முழுவதும் மாறும் வரை நன்கு வதக்கவும்.

பின்பு புளிக்கரைசல், உப்பு, அரைத்த மசாலா சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News