லைஃப்ஸ்டைல்

வரகரிசி வெண்பொங்கல்

Published On 2017-11-15 05:28 GMT   |   Update On 2017-11-15 05:28 GMT
வரகரிசி வெண்பொங்கல் சிறிது சாப்பிடவுடன் வயிறு நிறைந்த உணர்வை தரும் காலையில் சாப்பிட்டால், மதியம் கூட பசிக்காது. இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :

வரகரிசி - 1 கப்
பாசி பருப்பு - அரை கப்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
ப.மிளகாய் - 2
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
உப்பு - ருசிக்கு ஏற்ப
கருவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - 1 டீஸ்பூன்



செய்முறை :

சீரகம், மிளகை கொரகொரப்பாக தட்டி வைக்கவும்.

இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வரகரிசி, பாசிபருப்பை வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

வறுத்த வரகரிசி, பாசிப்ருப்பை குக்கரில் போட்டு 3 மடங்கு நீர் விட்டு, உப்பு சேர்த்து, ஒரு 6 விசில் போட்டு குழைய வேக வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு சேர்த்து வெடித்ததும் துருவி வைத்துள்ள இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, அதன் உடன் வேக வைத்து இருக்கும் வெண்பொங்கலை சேர்த்து கலந்து பரிமாறவும்.

சூப்பரான வரகரிசி வெண்பொங்கல் ரெடி.

சாம்பார், தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.

இது சிறிது சாப்பிட உடன் வயிறு நிறைந்த உணர்வை தரும்.நீண்ட நேரம் பசிக்காது.காலையில் சாப்பிட்டால்,மதியம் கூட பசிக்காது.எடை குறைக்க நினைபவர்களுக்கு நல்ல சாய்ஸ்.முதல் முதலில் சாப்பிட தொடங்கும் போது காலையில் சாப்பிடவும்.பின் இரவு சாப்பிடலாம்.சக்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News