லைஃப்ஸ்டைல்

வரகு எலுமிச்சை சாதம் செய்வது எப்படி

Published On 2017-10-28 05:39 GMT   |   Update On 2017-10-28 05:39 GMT
சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வரகு அரிசியை வைத்து சூப்பரான மதிய உணவு எலுமிச்சை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வரகு அரிசி - 2 கப்
எலுமிச்சம்பழம் - 2
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் - 1 டேபிள்ஸ்பூன்

பொடி பண்ண :

வெந்தயம் - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
உப்பு - தேவையான அளவு

தாளிக்க :

கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2 (நாலாக கிள்ளிக்கொள்ளவும்)
நிலக்கடலை - 10
முந்திரிபருப்பு - 5
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து



செய்முறை :


ஒரு கப் வரகு அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் குக்கரில் வைத்து 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.

குக்கரில் இருந்து எடுத்த வரகு சாதத்தை ஒரு அகண்ட தட்டில் கொட்டி அதன் மீது மஞ்சள்தூள், நல்லெண்ணைய் கலந்து ஆறவைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விடாமல் வெந்தயத்தை வறுக்கவேண்டும்.

சிறிது எண்ணைய் விட்டு மிளகாய் வற்றலை வறுக்கவேண்டும். உப்பு வறுக்கவேண்டாம்.

அனைத்தும் ஆறியதும் மிக்சியில் பொடித்து சாதத்தில் தூவவேண்டும்.

கடைசியாக தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதையும் சாதத்தில் கலந்து எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.

எல்லாவற்றையும் நன்றாக கலந்து பரிமாறவும்.

சூப்பரான வரகு அரிசி எலுமிச்சை சாதம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News