லைஃப்ஸ்டைல்

வறுத்து அரைத்த மிளகுக் குழம்பு செய்வது எப்படி

Published On 2017-10-23 03:31 GMT   |   Update On 2017-10-23 03:31 GMT
இந்த மழைக்காலத்தில் சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வறுத்து அரைத்த மிளகுக் குழம்பை செய்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.
தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் - 1 கப்,
புளி - எலுமிச்சை அளவு,
தக்காளி - 4,
எண்ணெய் - 5 டே.ஸ்பூன்,
பூண்டு - 20 பல்,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுந்து - அரை டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கறிவேப்பிலை - சிறிது.

அரைக்க :

மிளகு - 2 டேபிள் ஸ்பூன்,
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்,
உளுந்து, கடலை பருப்பு - தலா 2 டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
சுக்கு - 1 துண்டு,
மிளகாய் வற்றல் - 4.



செய்முறை :

புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றின் பின் ஒன்றாக போட்டு சூடுவர வறுத்து, ஆறவைத்து கால் கப் தண்ணீர் சேர்த்து நைசாக அரையுங்கள்.

மீதமுள்ள எண்ணெயை காயவைத்து கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அதனுடன் புளி கரைசல், அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து திக்கான பதம் வந்தவுடன் கறிவேப்பிலை தூவி இறக்குங்கள்.

அருமையான வறுத்து அரைத்த மிளகுக் குழம்பு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News