லைஃப்ஸ்டைல்

வயதானவர்களுக்கு உகந்த முளைக்கட்டிய கோதுமை சுண்டல்

Published On 2017-08-22 05:29 GMT   |   Update On 2017-08-22 05:29 GMT
வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு முளைக்கட்டிய கோதுமை சுண்டல் மிகவும் உகந்தது. இதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

முளைக்கட்டிய கோதுமை  - ஒரு கப்,
வெங்காயம்  - ஒன்று
காய்ந்த மிளகாய் -  2
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு,
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் கோதுமையை போட்டு அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.  

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதங்கியதும் வேக வைத்த கோதுமையை சேர்த்து நன்றாக கிளறவும்.

கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

சத்தான முளைக்கட்டிய கோதுமை சுண்டல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News