லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த சிறுதானிய வெங்காய பெசரட்டு

Published On 2017-08-14 05:22 GMT   |   Update On 2017-08-14 05:22 GMT
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று சிறுதானியம், பாசிபயறு வைத்து பெசரட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

முழு பாசிபயறு - 1/2 கப்
சோளம், தினை, குதிரைவாலி, வரகு கலந்து - 1/2 கப்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - 2
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய்  - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு.

செய்முறை :

சிறுதானியம், பாசிபயறு சேர்த்து நாலு மணி நேரம் ஊறவிடவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சிறுதானியங்கள் நன்றாக ஊறிய பிறகு அதனுடன் இஞ்சி, சீரகம், பச்சை மிளகாயுடன் சேர்த்து அரைத்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி அதன் மேல் நறுக்கிய வெங்காயத்தை தூவி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான சிறுதானிய வெங்காய பெசரட்டு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News