லைஃப்ஸ்டைல்

முட்டைகோஸ் - பசலைக் கீரை ஸ்டஃப்டு சப்பாத்தி

Published On 2017-08-12 05:18 GMT   |   Update On 2017-08-12 05:18 GMT
முட்டைகோஸ், பசலைக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த இரண்டையும் வைத்து சத்தான ஸ்டஃப்டு சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்
காய்ச்சிய பால் - அரை கப்
உப்பு - தேவையான அளவு.

ஸ்டப் செய்ய :

முட்டைகோஸ் துருவல் - அரை கப்
வெங்காயம் - 1
கேரட் துருவல் - கால் கப்
பசலைக் கீரை -  சிறிய கட்டு 1
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, பசலைக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கோதுமை மாவுடன் பால், உப்பு, தண்ணீர் விட்டு மிருதுவாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல், வெங்காயத் துருவல், பசலைக் கீரை ஆகியவற்றுடன் உப்பு சேர்த்து பிசறி வைத்து 10  நிமிடம் கழித்து காய்கறிக் கலவையை பிழிந்து எடுத்து அதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி,  மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிசைந்த மாவில், கொஞ்சம் மாவை எடுத்து கிண்ணம் போல் செய்து, அதனுள் பூரணம் வைத்து மூடி சற்று கனமாகத் சப்பாத்திகளாக உருட்டவும்.

தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து தேய்த்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து சுட்டெடுக்கவும்.

சுவையான சத்தான முட்டைகோஸ் - பசலைக் கீரை ஸ்டஃப்டு சப்பாத்தி தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News