லைஃப்ஸ்டைல்

ஜீரண சக்தியைத் தூண்டும் சீரக துவையல்

Published On 2017-08-07 05:32 GMT   |   Update On 2017-08-07 05:32 GMT
இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும்.
தேவையான பொருட்கள் :

சீரகம் - கால் கப்,
இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
சின்ன வெங்காயம் - 5,
புளி - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 5,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை போட்டு வதக்கவும்.

அனைத்தும் ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிடவும்.

சத்தான சீரக துவையல் ரெடி.

விருப்பப்பட்டால், எண்ணெயில் சிறிதளவு கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News