லைஃப்ஸ்டைல்

கொழுப்பை குறைக்கும் எள் துவையல்

Published On 2017-08-07 03:23 GMT   |   Update On 2017-08-07 03:23 GMT
எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. இன்று எள்ளை வைத்து சத்தான துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கறுப்பு எள் - அரை கப்,
பூண்டு - 2 பல்,
காய்ந்த மிளகாய் - 5,
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
புளி - கோலி அளவு,
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

வெறும் வாணலியை சூடாக்கி எள்ளை வறுத்துக் கொள்ளவும்.

மற்ற பொருட்களையும் (உப்பு தவிர) ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்து கொள்ளவும்.

வறுத்த பொருட்கள் ஆற வைத்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

சத்தான எள் துவையல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News