லைஃப்ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமா

Published On 2017-07-31 03:32 GMT   |   Update On 2017-07-31 03:32 GMT
சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் ஓட்ஸ் உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸை வைத்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேரட் - 1 கப்
குடைமிளகாய் - 1 கப்
பச்சை பட்டாணி - 1 கப்
பீன்ஸ் - 1 கப்
வெங்காயம் - 2
ஓட்ஸ் - 1 டீ கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
கடுகு - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

வழக்கமாக உப்புமாவுக்கு தண்ணீர் விட்டு செய்வது போல் ஓட்ஸ் உப்புமாவுக்கு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டியதில்லை. ஒரு பெரிய டீ வடிகட்டி அல்லது சல்லடையில் ஓட்ஸைப் போட்டு அதைத் தண்ணீர் பைப்பின் அடியில் வைத்து, தண்ணீர் விட்டு லேசாக அலசி விட்டுப் போட்டாலே ஓட்ஸ் சாஃப்ட்டாகி விடும்!

வெங்காயம், ப.மிளகாய், கேரட், குடைமிளகாய், பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் கேரட், குடைமிளகாய், பச்சை பட்டாணி போட்டு நன்றாக வதக்கவும். காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.

காய்கறிகள் வெந்தவுடன் அதில் ஓட்ஸ், உப்பு, தேங்காய் துருவல் போட்டு நன்றாக கிளற இறக்கவும்.

சூப்பரான சத்தான ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமா ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News