லைஃப்ஸ்டைல்

சளி, இருமலை கட்டுப்படுத்தும் ஏலக்காய் டீ

Published On 2017-07-05 05:29 GMT   |   Update On 2017-07-05 05:29 GMT
சளி, வறட்டு இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த ஏலக்காய் டீயை குடிக்கலாம். இன்று ஏலக்காய் டீ தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கிரீன் டீ அல்லது டீ தூள் - 2 டீஸ்பூன்,
நாட்டுச்சர்க்கரை - 2 டீஸ்பூன்,
ஏலக்காய் - 2,
பால் - ஒரு கப்.



செய்முறை :

* ஏலக்காயை தட்டி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாலுடன் அரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

* நன்கு கொதித்து வரும் போது அதில், தேயிலை, தட்டிய ஏலக்காய் சேர்க்கவும்.

* டிகாக்‌ஷன் இறங்கியதும், வடிகட்டி நாட்டுச்சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.

* சூப்பரான ஏலக்காய் டீ ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News