லைஃப்ஸ்டைல்

சத்தான கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை

Published On 2017-07-04 05:29 GMT   |   Update On 2017-07-04 05:29 GMT
டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சிற்றுண்டி கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை - 1 கப்
கடலை பருப்பு - கால் கப்
காய்ந்த மிளகாய் ? 2
தேங்காய் துருவல் - கால் கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க :

எண்ணெய் - தேவைக்கு
கடுகு - 1 டீஸ்பூன்
கடலைபருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை



செய்முறை :

* வெறும் கடாயில் கோதுமை ரவையை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.

* கடலைப்பருப்பை அரை மணிநேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாயுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வறுத்த ரவை, அரைத்த கடலைப்பருப்பு விழுது, சிறிது உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

* கலவை உப்புமா பதத்தில் வந்தவுடன் அதை கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் வேக வைத்து எடுக்கவும்.

* சத்தான கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News