லைஃப்ஸ்டைல்

சத்தான ஸ்நாக்ஸ் கம்பு இனிப்புப் பிடி கொழுக்கட்டை

Published On 2017-06-17 05:32 GMT   |   Update On 2017-06-17 05:32 GMT
குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இந்த கம்பு இனிப்புப் பிடி கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கம்பு - 150 கிராம்
துருவிய கருப்பட்டி - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துண்டுகள் - தேவையான அளவு
டிரை ஃப்ரூட்ஸ் - தேவையான அளவு



செய்முறை :

* தேங்காய்த்துண்டுகள், டிரைஃப்ரூட்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விடாமல் கம்பை பொன்னிறமாக வறுத்து ஆற விடவும்.

* கம்பு ஆறியதும் இதை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக பவுலில் வைக்கவும்.

* இதில் ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துண்டுகள், டிரை ஃப்ரூட்ஸ், கருப்பட்டி சேர்த்து கட்டியில்லாமல் கைகளால் நன்றாக கலக்கவும்.

* இதில் இரண்டு டேபிள்ஸ்பூன் சூடான நீரை ஊற்றி, மாவு ஈரமாகி அதை எந்த ஷேப்பில் வேண்டுமானாலும் உடையாமல் உருண்டை பிடிக்கலாம் எனும் பதத்துக்கு தண்ணீர் தெளித்துக் கிளறவும். அதிகமாக தண்ணீரை ஊற்றினால் மாவு சொதசொத என்றாகி விடும்.

* கைகளால் மாவை நீள வடிவத்துக்கு பிடித்து, இட்லித் தட்டில் வைத்து பதினைந்து நிமிடம் வேக வைத்து எடுத்துப் பரிமாறலாம்.

* சத்தான ஸ்நாக்ஸ் கம்பு இனிப்புப் பிடி கொழுக்கட்டை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News