லைஃப்ஸ்டைல்

உடலில் பித்தத்தை குறைக்கும் திரிகடுகம் காபி

Published On 2017-06-08 03:32 GMT   |   Update On 2017-06-08 03:32 GMT
இந்த காபி உடலில் பித்தத்தை சமப்படுத்தும். உடலில் உள்ள நச்சுத்தன்மையை முறிக்கும். சளியை குணமாக்கும். இன்று இந்த காபி தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மிளகு - 30 கிராம்
சுக்கு - 50 கிராம்
திப்பிலி - 5 கிராம்
கருப்பட்டி - தேவையான அளவு
காபி தூள் - 2 ஸ்பூன்



செய்முறை :

* மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றை நன்றாக பொடித்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் கருப்பட்டியை போட்டு கரைந்த பின்னர் காபி தூள், திரிகடுகம் பொடி சேர்த்து கலந்து 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கி மூடி வைக்கவும்.

* தூள் தெளிந்தபின்னர் வடிகட்டி சூடாக பருகவும்.

* திரிகடுகம் காபி ரெடி.

* இதை பால் சேர்க்காமல் அருந்த வேண்டும். காலை - மாலை இரு வேளை குடிப்பது நல்லது.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News