லைஃப்ஸ்டைல்

சூப்பரான டிபன் லெமன் இடியாப்பம்

Published On 2017-06-03 06:40 GMT   |   Update On 2017-06-03 06:40 GMT
இடியாப்பம் சாப்பிட்டு போரடித்தவர்கள் வித்தியாசமான லெமன் இடியாப்பம் செய்து அசத்தலாம். அன்று இந்த லெமன் இடியாப்பத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

இடியாப்ப மாவு - 2 கப்,
எலுமிச்சம் பழம் - 1,
உப்பு - தேவைக்கு.

தாளிக்க...

கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தேவையான அளவு,
பெருங்காயத்தூள் - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
கொத்தமல்லி - சிறிதளவு.


 
செய்முறை :

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீரை மளமளவென கொதிக்க வைத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவில் உப்பு சேர்த்து கலந்து கொதிக்கும் தண்ணீரை ஊற்றி மத்தினால் கிளறி மாவை பிசைந்து கொள்ளவும். மாவை அச்சில் போட்டு இடியாப்பம் பிழிந்தெடுத்து, ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை நிறுத்தி இறக்கவும்.

* இப்பொழுது எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கிளறி, ஆறியதும் இடியாப்பத்தில் கொட்டி கலந்து உதிரியாக பிசறி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

* லெமன் இடியாப்பம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News