லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி

Published On 2017-05-29 05:25 GMT   |   Update On 2017-05-29 05:25 GMT
சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் சிறந்தது. இன்று ஓட்ஸ், காய்கறிகளை வைத்து சத்தான ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 250 கிராம்,
உப்பு - தேவைக்கு,
ஓட்ஸ் - 100 கிராம்,
கொத்தமல்லித்தழை - சிறிது,
கேரட் - 1,
பெரிய வெங்காயம் - 1,
பீட்ரூட் - சிறியது 1
பச்சைமிளகாய் - 3,
ப்ரோக்கோலி - 50 கிராம்,
எண்ணெய் - தேவைக்க
சீரகம் - 1 டீஸ்பூன்.



செய்முறை :

* கேரட், பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும்.

* ப.மிளகாய், வெங்காயம், ப்ரோக்கோலியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்த பின்னர் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கோதுமை மாவு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு போட்டு கலந்து, கேரட், பீட்ரூட், ப்ரோக்கோலி தேவையான தண்ணீர் சேர்த்து மாவை சப்பாத்தி மாவு பதத்தில் நன்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

* தோசைக்கல்லை சூடாக்கி மாவை சிறு உருண்டைகளாக பிடித்து லேசாகத் தேய்த்து கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்து மொறுமொறுவென்று வந்ததும் எடுத்து பரிமாறவும்.

* சத்தான ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News