லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த முளைக்கீரை தயிர்க்கூட்டு

Published On 2017-05-27 05:00 GMT   |   Update On 2017-05-27 05:00 GMT
தினமும் கீரையில் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. கீரையில் கூட்டு, பொரியல் செய்து இருப்பீங்க. இன்று கீரையுடன் தயிர் சேர்த்து கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

முளைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
தேங்காய் துருவல் - சிறிதளவு,
பச்சை மிளகாய் - ஒன்று,
புளிக்காத தயிர் - ஒரு கப்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

* கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிக்சியில் தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

* கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் முளைக்கீரையை போட்டு வேகவிடவும்.

* கீரை வெந்ததும், உப்பு, தேங்காய் விழுது, தயிர் சேர்த்துக் கலந்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கீரையில் சேர்த்துக் கலக்கவும்.

* இப்போது முளைக்கீரை தயிர்க்கூட்டு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News