லைஃப்ஸ்டைல்

சத்தான டிபன் வெஜிடபிள் இட்லி உப்புமா

Published On 2017-05-22 03:32 GMT   |   Update On 2017-05-22 03:33 GMT
வெஜிடபிள் இட்லி உப்புமா மிகச் சிறந்த காலை உணவு. இட்லி சாப்பிட விரும்பாத குழந்தைகளும் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

நன்றாக வேகவைத்த மினி இட்லி - 15,
பச்சை மிளகாய் - 2,
நல்லெண்ணெய் - சிறிதளவு,
இஞ்சி - சிறிது துண்டு,
சீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிதளவு,
கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி ஆகியவை சேர்த்து - 30 கிராம்.



செய்முறை :

* கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி, பச்சைப் பட்டாணியுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

* ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சித்துண்டுகள், சீரகத்தூள், ப.மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வேகவைத்த கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை சேர்த்து, நன்றாக வதக்கவும்.

* கடைசியாக சிறு இட்லிகளை நன்றாக உதிர்த்து, மசாலாவுடன் சேர்த்துக் கிளறவும்.

* இட்லி உப்புமா போல உதிர்ந்து வரும் போது அதன் மேல் கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும்.

* வெஜிடபிள் இட்லி உப்புமா ரெடி.

* சாம்பார், சட்னியுடன் பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News