லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த கார்ன் - குடமிளகாய் சாலட்

Published On 2017-05-18 05:27 GMT   |   Update On 2017-05-18 05:27 GMT
தினமும் ஏதாவது ஒரு சாலட்டை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று கார்ன் - குடமிளகாய் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சோளம் - 1,
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு,
வெங்காயம் - 1
தக்காளி - 1,
சின்ன குடமிளகாய் -  1,
பச்சை மிளகாய் - 1,
கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு - சிறிதளவு.



செய்முறை :

* சோளத்தை வேகவைத்து நன்றாக உதிர்த்துக்கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, குடமிளகாய், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் உதிர்த்த சோளத்துடன் வெங்காயம், தக்காளி, உப்பு, மிளகுத்தூள், குடமிளகாய், ப. மிளகாய், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

* சத்து நிறைந்த கார்ன் - குடமிளகாய் சாலட் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News