லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த வாழைத்தண்டு சட்னி

Published On 2017-05-08 03:38 GMT   |   Update On 2017-05-08 03:38 GMT
சத்து நிறைத்த வாழைத்தண்டை பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இந்த வாழைத்தண்டை வைத்து சத்தான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

நறுக்கிய வாழைத்தண்டு - கால் கப்
தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 3 பல்
தோல் நீக்கிய இஞ்சி - ஒரு சிறு துண்டு
கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைத்தண்டை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கி ஆற விடவும்.

* மிக்சியில் வதக்கிய வாழைத்தண்டு, தேங்காய் துருவல், பூண்டு, இஞ்சி, காய்ந்த மிளகாய், உப்பு போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, அரைத்த சட்னியுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

* சத்து நிறைந்த வாழைத்தண்டு சட்னி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News