லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த ஆப்பிள் சூப் செய்வது எப்படி

Published On 2017-04-27 03:32 GMT   |   Update On 2017-04-27 03:32 GMT
ஆப்பிள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப்பாக செய்து கொடுக்கலாம். இன்று ஆப்பிளை வைத்து சத்து நிறைந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஆப்பிள் - 2,
எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,  
பால் - ஒரு டம்ளர்.



செய்முறை :

* ஆப்பிளை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெண்ணெயை உருக்கி, பொடியாக நறுக்கிய ஆப்பிள் சேர்த்து லேசாக வதக்கி, 2 டம்ளர் நீர் சேர்த்து வேகவிடவும்.

* ஆப்பிள் நன்றாக வெந்ததும் அதை கரண்டியால் சற்று மசித்து விடவும். மிளகுத்தூள், பால் சேர்த்துக் கலக்கவும்.

* பரிமாறும் முன் விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளலாம்.  

* சத்தான ஆப்பிள் சூப் ரெடி.

பலன்கள்: ஆப்பிள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப்பாக செய்து கொடுக்கலாம். இதில், வைட்டமின்கள், புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளன. எந்த நோயும் உடலைத் தாக்காமல் காப்பதுடன், உடலை வலுவாக்கும். சருமம் பொலிவாகும். உடல் எடையைக் குறைக்கவும், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News