லைஃப்ஸ்டைல்

உடல் எடையை குறைக்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ்

Published On 2017-04-22 05:23 GMT   |   Update On 2017-04-22 05:23 GMT
உடல் எடையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு காலை வேளையில் இந்த கற்றாழை ஜூஸை குடித்து வருவது மிகவும் நல்லது. உடலுக்கும் குளுமை தரும் இந்த ஜூஸ்.
தேவையான பொருட்கள் :

கற்றாழை ஜெல் - 100 கிராம்
எலுமிச்சை - 1
தேன் - தேவையான அளவு
இஞ்சி - 1/2 இன்ச்
உப்பு - 1 சிட்டிகை



செய்முறை :

* கற்றாழையில் உள்ள ஜெல் பகுதியை மட்டும் எடுத்து நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* எலுமிச்சை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

* இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிக்ஸியில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு அத்துடன் கற்றாழை ஜெல், தண்ணீர் 1 கப் சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் நன்றாக அடிக்கவும்.

* அரைத்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றி பருகவும்.

* இஞ்சி கற்றாழை ஜூஸ் ரெடி!!!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News