லைஃப்ஸ்டைல்

ஜீரண சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழ ரைத்தா

Published On 2017-03-29 03:33 GMT   |   Update On 2017-03-29 03:33 GMT
அன்னாசி பழ ரைத்தா புலாவ், பிரியாணி உடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று இந்த பழ ரைத்தாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

அன்னாசி பழத்துண்டுகள் - 1 கப்
அன்னாசி பழச்சாறு - 1 கப்
தயிர் - 1 கப்
சீரகப்பொடி - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
கொத்தமல்லி இலை - 1 டீஸ்பூன் ( நறுக்கியது)



செய்முறை :

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதல் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கெட்டியான அன்னாசி சாறு, தேன் ஊற்றி நன்கு கிளறி விடவும்.

* அடுத்து அதில் நறுக்கிய அன்னாச்சிப் பழத்துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு அன்னாசி தயாரானதும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.

* தயிரில் வதக்கிய அன்னாசியை இட்டு, சீரகப் பொடி, நறுக்கிய கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

* அதனை அழகுப்படுத்த மேலாக அன்னாசி துண்டுகளை வைத்து பரிமாறலாம்.

* அன்னாசி பழ ரைத்தா ரெடி!

* இதை சாலட் போலவும் சாப்பிடலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News