லைஃப்ஸ்டைல்

வெயிலுக்கு உகந்த கொய்யாப்பழ ஜூஸ்

Published On 2017-03-27 05:11 GMT   |   Update On 2017-03-27 05:11 GMT
1 கொய்யாப்பழத்தின் சத்துக்கள் ஆரஞ்சு பழத்தின் சத்தைவிட 4 மடங்கு அதிகம். வெயிலுக்கு உடலுக்கு இதம் தரும் கொய்யாப்பழ ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கொய்யாப்பழ துண்டுகள் - 3 கப்
குளிர்ந்த தண்ணீர் - 2 கப்
தேன் - 3 டீஸ்பூன்



செய்முறை :

* கொய்யாப்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

* நறுக்கிய கொய்யாப்பழத்தை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு மைய அடித்துக் கொள்ளவும்.

* அரைத்த ஜூஸை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஐஸ் தண்ணீர், ஐஸ் கட்டி, தேன் சேர்த்து நன்கு கலந்து ஒரு கிளாஸில் ஊற்றவும்.

* வெயிலுக்கு உகந்த கொய்யாப்பழ ஜூஸ் ரெடி.

குறிப்பு :

இதில் தண்ணீருக்கு பதிலாக குளிர்ந்த பாலும் சேர்த்து கொள்ளலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News