லைஃப்ஸ்டைல்

கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்

Published On 2017-03-22 05:17 GMT   |   Update On 2017-03-22 05:17 GMT
கேரளாவில் கோழிக்கோடு, எர்ணாக்குளம், கொச்சி போன்ற பகுதிகளில் மிகவும் பிரபலமானது குலுக்கி சர்பத். இந்த பானம் கோடைக்காலத்திற்கு ஏற்ற ஓர் அற்புத பானம்.
தேவையான பொருட்கள் :

சப்ஜா விதை - 2 டீஸ்பூன்
எலுமிச்சை - 2
இஞ்சி ஜூஸ் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சோடா - 2 கப்
தேன் - தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் - சிறிது



செய்முறை :

* எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து கொள்ளவும்.

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சப்ஜா விதையை சிறிது நீரில் 20 நிமிடம் ஊற வைத்து, நீரை வடிகட்டி விட்டு சப்ஜா விதைகளை தனியாக வைத்துக் கொள்ளவும்.

* ஒரு ஷேக்கரில் ஊற வைத்த சப்ஜா விதைகள், எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, பச்சை மிளகாய், சோடா, தேன் சேர்த்து 30 நொடிகள் நன்கு குலுக்கி, பின் அதில் ஐஸ் கட்டிகளை சேர்த்து பரிமாறவும்.

* கோடை வெயிலுக்கு இதம் தரும் குலுக்கி சர்பத் ரெடி.

குறிப்பு  :

தேன் பிடிக்காதவர்கள் சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News