லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த பாதாம் - ஓட்ஸ் மில்க் ஷேக்

Published On 2017-03-02 05:53 GMT   |   Update On 2017-03-02 05:53 GMT
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு காலையில் சத்து நிறைந்த பாதாம் - ஓட்ஸ் மில்க் ஷேக் கொடுக்கலாம். இப்போது இந்த மில்க் ஷேக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாதாம் - 20
காய்ந்த திராட்சை - 10
ஓட்ஸ் - அரை கப்
ஏலக்காய் - இரண்டு
தேன் - தேவைக்கு
பால் - இரண்டு கப்
கிரீம் - இரண்டு டீஸ்பூன்
ஐஸ் கட்டி - இரண்டு துண்டு
முந்திரி துண்டுகள் - ஐந்து, அலங்கரிக்க



செய்முறை :

* பாதாம், காய்ந்த திராட்டையை அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

* முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

* மிக்சி பிளண்டரில் ஓட்ஸ், ஏலக்காய், தேன், பால், ஊறவைத்த பாதாம், காய்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்ததில் பிரெஷ் கிரீம், ஐஸ்கட்டி சேர்த்து மீண்டும் மிக்சியில் ஒரு அடி அடித்து ஒரு கப்பில் ஊற்றி முந்திரி துண்டுகள் துவி பரிமாறவும்.

* சத்து நிறைந்த பாதாம் ஓட்ஸ் மில்க் ஷேக் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News